கன்னி ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய செயலை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். அந்த செயலை நீங்களே செய்வது நல்லது. சுய தேவை ஓரளவு பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும். அளவான பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவுகளை மட்டும் தயவு செய்து உண்ண வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். குடும்ப பிரச்சினைகள் தீரும். மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
எவ்வளவுதான் நீங்கள் திறமையாக செயல்பட்டாலும் பாராட்டுக்கள் கிடைப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை கொடுக்கலாம். கவனமாக இருங்கள். மற்றவர்கள் உங்களை குறை சொல்வார்கள். எதையும் நீங்கள் காதில் வாங்காதவர் போல் இருப்பது மிகவும் நல்லது. சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள் அது போதும். மாணவர்கள் இன்று கடினமாகத்தான் படிக்க வேண்டியிருக்கும்.
படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். அது மட்டும் இல்லாமல் சக மாணவரிடம் பழகும் போது கொஞ்சம் கவனமாக பழகுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்