பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவதற்கான புதிய சட்டம் லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான புதிய சட்டத்திற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பாலியல் குற்றவாளிகளின் தண்டனைகளை விரிவுபடுத்துவதற்கு கடுமையான தண்டனைகளை வழங்குவதற்கு இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தனது வாழ்நாளில் எந்த காலகட்டத்திலும் உடலுறவு கொள்ள முடியாத வகையில் அவர்களுடைய விதைப்பை ரசாயனங்களை பயன்படுத்தி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனி பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுதான் தண்டனை.