இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது.இதில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது .இந்நிலையில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி ராஞ்சியில் இன்று இரவு நடைபெறுகிறது. இதனிடையே டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடி சில நாட்களில் மீண்டும் போட்டியில் களம் இறங்கினாலும் நியூசிலாந்து அணி எல்லா வகையிலும் சவால் அளித்தது .
இதில் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் களமிறங்கிய நியூசிலாந்து அணி 164 ரன்கள் குவித்தது .அதோடு பந்துவீச்சில் கடைசி ஓவர் வரை ஆட்டத்தை கொண்டு சென்றது .இறுதியில் இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது.எனவே முதல் போட்டியில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் வகையில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் முந்தைய ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறந்த ஃபார்மில் இருந்தனர் . அதேபோல் பந்துவீச்சில் அஸ்வின் ,புவனேஷ்வர் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.