Categories
தேனி மாவட்ட செய்திகள்

இழப்பீடு வழங்க கோரிக்கை… நீதிபதியின் அதிரடி உத்தரவு… அரசு பேருந்து ஜப்தி…!!

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் காளிச்சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் விடுதி மேலாளரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மோதி விபத்து அடைந்துள்ளது. இந்த விபத்தில் காளிசரணுக்கு கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். இதனையடுத்து காளிச்சரண் இழப்பீடு வழங்கக்கோரி கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசு போக்குவரத்து கழகம் காளிசரணுக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது வரை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் காளிசரணுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. எனவே காளிசரண் பெரியகுளம் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிபதி இழப்பீடு தொகை வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற ஊழியர் சேகர் தலைமையில் பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு சென்று அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர்.

Categories

Tech |