Categories
மாவட்ட செய்திகள்

இயற்கை உபாதை கழிக்க சென்ற டிரைவர்…. ஏரியில் ஏற்பட்ட விபரீதம்…. விழுப்புரத்தில் நடந்த சோகம்….!!!

விழுப்புரம் மாவட்டம் மயிலம் ஒன்றியத்தில் உள்ள ஆலகிராமத்தில் முத்துகிருஷ்ணன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது ஏரியில் தவறி நீரில் விழுந்து உயிரிழந்து விட்டார். அதன் பிறகு வெளியே சென்றவரை காணவில்லை என்று அவரது மனைவி மற்றும்  உறவினர்கள் தேடி பார்த்தனர். அப்போது ஏரியில் முத்துகிருஷ்ணன் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து பெரியதச்சூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |