Categories
உலக செய்திகள்

லஞ்சம் வாங்கி கொழுப்பதில்…. இந்தியாவுக்கு 82-வது இடம் …. பாக்., சீனாவை விட அதிகம் …!!

நிறுவனங்கள் அரசு அதிகாரிகளுக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாயம் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 82-வது இடத்தில் உள்ளது.

ஊழலுக்கு எதிரான தர நிர்ணய அமைப்பான டிரேஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான அறிக்கையில், தொழில் முனைவோரும் நிறுவனங்களும், அரசு அதிகாரிகள் மற்றும் பிறருக்கு கையூட்டு அளிக்க வேண்டிய அபாய திற்கான தரவரிசைப் பட்டியலில் அரசு கடந்த ஆண்டு இந்தியாவில் 77-ஆவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் நடப்பாண்டிற்கான இந்தப் பட்டியலில் 44 புள்ளிகளைப் பெற்று இந்தியா 82-வது இடத்தை பெற்றுள்ளது.

எனினும் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளை விட இந்தியா அதிக புள்ளிகளைப் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் வடகொரியா, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா எரித்ரியா ஆகிய நாடுகளில் தொழிலுக்கான கையூட்டு செலுத்த வேண்டிய அபாயம் அளவில் உள்ளது.

ஆனால் டென்மார்க், நார்வே, பின்லாந்து, ஸ்வீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த அபாயம் மிகக் குறைவாக உள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கும், அரசுக்கும் இடையிலான தகவல் பரிமாற்றங்கள், ஊழல் தடுப்பு அமைப்புகள் செயலாற்றும் திறன் அரசு சேவைகளின் வெளிப்படைத்தன்மை, ஊடகம் உள்ளிட்ட சமூக அமைப்புகளின் செயலாற்றல் ஆகிய 4 அம்சங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |