Categories
மாநில செய்திகள்

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய்… சிறை தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்..!!!

மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்ணுக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

சென்னையை சேர்ந்த வசந்தி என்பவர் பணத்தாசையால் தனது 13 வயது மகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக புகார் வந்தது.  பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பெயரில் அவரது தாய் உள்ளிட்ட 10 பேர் மீது விபச்சார தடுப்பு மற்றும் போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் சிறுமியின் தாய்க்கு 10 ஆண்டு சிறையும், கைது செய்யப்பட்டவர்களுள் இருவருக்கு தலா ஏழு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.

மற்றவர்களை விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இந்த  தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், விடுதலையை எதிர்த்து போலீஸ் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. இதில் சிறுமியின் தாய் உள்ளிட்ட இருவருக்கு நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் விடுவிக்கப்பட்ட அனைவருக்கும் 7 முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Categories

Tech |