தூங்குவதாக கூறி அறைக்குள் சென்ற மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அபிராமி நகரில் மாணிக்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சோனிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் பாளையங்கோட்டையிலுள்ள கல்லூரியில் பி.எட் படித்து வந்துள்ளார். இந்நிலையில் மழையின் காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் சோனிகாவின் தந்தை அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின் வயிற்றுவலி என்று கூறி சோனிகா அவரது அறைக்கு தூங்குவதற்காக சென்றுள்ளார். பின்னர் சோனிகாவின் தந்தை சாப்பிடுவதற்காக அவரது அறையின் கதவை தட்டியுள்ளார்.
நீண்ட நேரமாகியும் சோனிகா வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது சோனிகா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். பிறகு உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சோனிகா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.