அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் இரு பாகங்களாக உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது.
செம்மரக் கடத்தலை மையமாக வைத்து புஷ்பா படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தின் முதல் பாகம் டிசம்பர் 17-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் புஷ்பா படத்தின் தமிழ் பதிப்பிற்கான உரிமையை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.