தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. 15 மாதங்களுக்கும் மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தது. அதன் பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பொறியியல் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் படிப்படியாக திறக்கப்பட்டது. இந்நிலையில் கல்லூரிகள் திறந்து இரண்டு மாதங்களில் பண்டிகை காலங்கள் மற்றும் பருவ மழை என்று கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு இந்த செமஸ்டர் பாடங்களை ஆசிரியர் முழுமையாக நடத்த முடியவில்லை. அது மட்டுமில்லாமல் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.
மேலும் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகள் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனரா என்று அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வருகிறார்கள் என்றும் உறுதி செய்யப்பட்ட பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடத்தினால் மாணவர்கள் முழு திறனுடன் விட தேர்வை எதிர் கொள்வார்கள்.
எனவே அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை பரிசீலித்து நடைபெற உள்ள இந்த செமஸ்டர் தேர்வுகளில் மட்டும் நேரடியாக நடத்தப்படாமல் ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும். மேலும் மாணவ மாணவர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.