இந்தோனேசியாவில் வேட்டைக்காரர்கள் விரித்திருந்த வலையில் மாட்டிக்கொண்ட குட்டியானை பாதி துதிக்கையை இழந்து தவிப்பது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குட்டியானை சுமத்ரா என்ற ஆசிய யானை இனமாகும். கடந்த 2011 ஆம் வருடத்தில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு சங்கமானது, சுமத்திரா யானை இனத்தை மிக அரிய இனம் என்று பிரகடனப்படுத்தியது. வாழ்வு இடத்திற்கான தட்டுப்பாடு காரணமாக இந்த வகை யானை இனம் அழிந்து வருகிறது.
இந்த யானை இனத்தின் வாழிடங்களில் 69% கடந்த 25 ஆண்டுகளில் அழிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இந்தோனேசிய அரசு சுமத்ரா யானை இனத்தை பாதுகாப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சுமத்ரா யானை வகையில் தற்போது 700 யானைகள் தான் இருக்கிறது.
இதற்கிடையில் நாட்டில் உள்ள ஆச்சே என்ற பகுதியில், கடந்த திங்கட்கிழமை அன்று வேட்டைக்காரர்கள், யானைகளை வேட்டையாட வலை விரித்திருக்கிறார்கள். அதில், குட்டியானை மாட்டிக்கொண்டது. அந்த வலையிலிருந்து, குட்டி யானை தப்பிக்க முயன்ற போது, அதன் பாதி தும்பிக்கை துண்டானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.