Categories
உலக செய்திகள்

“வான்வழி தாக்குதல் நடத்திய ஈராக் விமானப்படை!”.. ஐஎஸ் தீவிரவாதிகள் 5 பேர் உயிரிழப்பு..!!

ஈராக் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியதில் ஐஎஸ் தீவிரவாதிகள் 5 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.எஸ் தீவிரவாதிகள் முதலில் சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். எனவே, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் உள்நாட்டு படைகள் அதிரடி தாக்குதல் மேற்கொண்டு  ஐ.எஸ் தீவிரவாதிகளை வீழ்த்தியது. எனினும், ஐஎஸ் தீவிரவாதிகள் அமைப்பைச் சேர்ந்த சில குழு, ஈராக் நாட்டின் பாலைவனப்பகுதிகளில் பதுங்கியிருந்து, அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

எனவே, ஈராக்கின் காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர், அவர்களை அழிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், தீவிரவாதிகள் மற்றும் அரசப்படையினருக்கு இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று ஈராக்கின் டியாலா மாகாணத்தில் உள்ள  உத்ஹீம் பகுதியில் விமானப்படையினர்,  தீவிரவாதிகளின் இருப்பிடங்களை நோக்கி அதிரடியாக வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |