Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நானியின் ‘ஷியாம் சிங்கா ராய்’… டீசரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்…!!!

நானி நடிப்பில் உருவாகியுள்ள ஷியாம் சிங்கா ராய் படத்தின் தமிழ் டீசரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது இவர் நடிப்பில் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் ஷியாம் சிங்கா ராய் திரைப்படம் உருவாகியுள்ளது. கொல்கத்தாவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் .

சானு வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு மிக்கி.ஜே.மேயர் இசையமைத்துளார். இந்நிலையில் ஷியாம் சிங்கா ராய் படத்தின் தமிழ் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்த படம் ரிலீசாக உள்ளது.

Categories

Tech |