மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டத்திற்கு தலீபான்கள் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ஆலோசனை செய்வதற்காக ரஷ்யா, சீனா, ஈரான் பாகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற நாடுகள் மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளனர். இந்தப் ஆலோசனைக் கூட்டத்திற்கு தலீபான்கள் அமைப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
இதனை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சரான ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் பாகிஸ்தான் மற்றும் ஈரானில் நடைபெற்ற முதல் இரண்டு கட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தலீபான்கள் அமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. குறிப்பாக மூன்றாவது கட்ட ஆலோசனைக் கூட்டமானது சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் என கூறப்படுகிறது.