Categories
மாநில செய்திகள்

அடுத்த ரெய்டு…. ரூ. 500 கோடி: சிக்கலில் ஓபிஎஸ்…. புதிய பரபரப்பு….!!!

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அடுத்தடுத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் மீது 500 கோடி ரூபாய் மதிப்பில் ஊழல் புகார் ஒன்று எழுந்துள்ளது. இது தொடர்பாக தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞான ராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அலுவலகங்களிலிருந்து அனுமதியின்றி 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மணலை உதவியாளர்கள் மூலமாக முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எனது புகார் மீது உரிய விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் 207 பக்க ஆதாரங்களுடன் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், ஆரம்ப கட்ட விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார். இதையடுத்து காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊழல் கண்காணிப்பு ஆணையரின் ஒப்புதல் பெறுவதற்காக மனுதாரரின் புகார் அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளதாக கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை 2 மாதங்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Categories

Tech |