Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்றபோது… டிரைவருக்கு ஏற்பட்ட விபரீதம்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

லாரி டிரைவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்து டிரைவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை அடுத்துள்ள பொட்டிதட்டி கிராமத்தில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் வேல்முருகன் அப்பகுதியில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது ராமநாதபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக வேல்முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. இந்த கோர விபத்தில் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனைபார்த்த பொட்டிதட்டி கிராம மக்கள் உடனடியாக தனியார் பேருந்தை பிடிக்க வலியுறுத்தி அப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் வேல்முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற தனியார் பேருந்தை காவல்துறையினர் இளையான்குடியில் மடக்கிப் பிடித்துள்ளனர். இதுகுறித்து தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் சாலை மறியலை கைவிடாததால் அப்பகுதியில் சுமார் ஒரு 1 நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

Categories

Tech |