Categories
மாநில செய்திகள்

தமிழக கல்லூரி பேராசிரியர்களுக்கு…. அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. ஆனால் சில கல்லூரிகளில் முதல்வர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்த 37 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்கள் அனைவருமே பதவிஉயர்வு பெற்று பல கல்லூரி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் புதிதாக முதல்வராக நியமிக்கப்பட்டவர்கள் உடனடியாக பணியில் சேரவும் உயர்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றி வரும் உதவி பேராசிரியர்கள் 37 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |