Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து மதம் என்றா நக்கலா போச்சா…? ஜெய்பீம் படத்தின் நோக்கம் இதுதானாம்…  ஒரே போடு  போட்ட ஹெச்.ராஜா…!!!!

வன்னிய குல சமூகத்திற்கும், பட்டியலின சமூகத்திற்கும் இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மத மாற்றம் செய்யும் முயற்சியுடன் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அறநிலைத் துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கோவில் விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரியும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நிர்ப்பந்தம் செய்ய என்னால் முடியும். திமுக அரசு கோவில்களை கொள்ளையடித்து வருகின்றது. உண்டியல் நிரப்புவதை பார்த்தால் அள்ளிக்கொண்டு போ, பூஜையில் தலையிடக்கூடாது என மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.

மீண்டும் மீண்டும் அறநிலைத்துறை கோவில் விஷயங்களை தலையீட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக என் மீது தமிழ்நாடு முழுவதும் எத்தனை பொய் வழக்குகள் வேண்டுமானாலும் போடட்டும். அதை சந்திக்க தயார்.  ஜெய்பீம் படத்தை உண்மை சம்பவம் என்று கூறுகின்றனர். ஆனால் அந்தோணிசாமி என்ற பெயரை மட்டும் குருமூர்த்தியாக மாற்றி இருக்கிறார்கள். அந்த இடத்தில் எந்த காலண்டரும் இருக்கக்கூடாது. காலண்டர் வைத்தாக வேண்டும் என்றால் இயேசுநாதர் காலண்டரையோ அல்லது வேறு ஏதாவது காலண்டரை வைத்திருக்கலாம்.

ஏன் மகாலட்சுமி காலண்டரை வைத்தீர்கள்?  இந்து மதம் என்றால் நக்கலாக போய்விட்டதா? நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா இந்துமக்கள் கோவிலுக்குள் போவதை இழிவாக பேசியுள்ளார். நாகூர் தர்காவை பற்றி அவர் பேசி இருக்கலாம்.  இல்லையெனில் வேளாங்கண்ணிக்கு போக வேண்டாம் என்று கூறி இருக்கலாம் . ஆனால் அவர்கள் சொல்லவில்லை. ஏனென்றால் அது அவர்களின் மதம், ஜெய் பீம் படம் வன்னியர் குல சமுதாயத்துக்கும் பட்டியல் இன சமுதாயத்திற்கும் இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மத மாற்றம் செய்யலாம் என்று முக்கிய நோக்கத்தோடு எடுக்கப்பட்டது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |