செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தக்கோரி மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுரண்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லைப் பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகள் அனைத்திற்கும் செமஸ்டர் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காமராஜர் அரசு கல்லூரி மாணவர்கள் தங்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் ஆன்லைனில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இவர்கள் நேற்று வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை போலீசார் மற்றும் இன்ஸ்பெக்டர் விமலா ஆகியோர் அந்த பகுதிக்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திவரும் அவர்கள் கலைந்து சென்றனர்.