Categories
அரசியல் மாநில செய்திகள்

சிங்கார சென்னை… “இப்ப வரைக்கும் மழை பெய்தால் மூழ்குகின்ற சிங்க் சென்னையாகதா இருக்கு”… ஹெச்.ராஜா காட்டம்…!!!

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்று கூறியவர்கள், தற்போது வரை மழை வந்தால் மூழ்குகின்ற சிங்க் சென்னையாகவே வைத்துள்ளனர் என்று ஹெச் ராஜா விமர்சித்துள்ளார்.

இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பொதுக்கூட்டத்தில் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றிருந்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சென்னை மட்டுமின்றி டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மேயராக இருந்தபோது சென்னை சிங்கார சென்னையாக மாற்றுவேன் என்று கூறினார். தற்போது அவர் முதல்வராக உள்ளார். ஆனாலும் சென்னை சிங்காரச் சென்னையாக இல்லாமல் மழை பெய்தால் மூழ்குகின்ற சிங்க் சென்னையாகவே உள்ளது என்று விமர்சித்துள்ளார். மேலும் கருணாநிதி காலத்தில் கட்டப்பட்ட வள்ளுவர்கோட்டம், நீர் நிலையை மூடி அதன்மீது கட்டப்பட்டது. சட்டத்துக்கும், நியாயங்களும் இங்கு மரியாதையே கிடையாது. சென்னை மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தலா 5 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். டெல்டா மாவட்டங்கள், கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

 

Categories

Tech |