அவதூறு வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா ஒருவழியாக நேற்று முன்தினம் ஆஜரானார். இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பொதுக்கூட்டத்தில் தவறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்மனை பெற்றுக் கொண்ட h. ராஜா விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் குறிப்பிட்ட தேதியில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வேறுவழியின்றி எச் ராஜா பாஜக கூட்டத்துடன் கோர்ட்டில் ஆஜரானார். விசாரணைக்கு பிறகு அடுத்த மாதம் டிசம்பர் 8ஆம் தேதி வழக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அன்று வழக்கின் மீதான கேள்விகள் கேட்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்பாக ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் கட்சி கூட்டத்துடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.