Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு….. சூப்பர் செய்தி….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தீபாவளி பரிசு, அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை அறிவித்தது.அது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசாக மீண்டும் சம்பளம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி31 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ஜனவரி மாத தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட நடவடிக்கை நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளது.

Categories

Tech |