டெல்லியில் அரசு நடத்தி வந்த மதுபான விற்பனை முற்றிலுமாக இன்று முதல் நிறுத்தப்படுகிறது. இதனையடுத்து இன்று முதல் தனியார் நடத்தும் கடைகளில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் புதிய கலால் கொள்கையை மாநில அரசு அறிவித்துள்ளதன்படி சில்லறை மதுபான கடைகளை அரசு நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
எனவே மதுபான விற்பனை முற்றிலும் தனியார்மயம் ஆகிறது. இதன் காரணமாக டெல்லி முழுக்க இனி தனியார் கடைகளில் மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்படும். நேற்று நள்ளிரவுடன் அரசு மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கிட்டத்தட்ட 600 கடைகள் மூலம் அரசே மதுபான விற்பனையை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு முதல் மூடப்பட்டு இன்று முதல் தனியார் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.