Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே உஷாரா இருங்க…! இது உங்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு …!!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும்.

18ஆம் தேதி தெற்கு ஆந்திரா, வட தமிழக கடற்கரை நோக்கி நகரக் கூடும் என தெரிவித்தார். கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை மற்றும் திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கும் ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக புவியரசன் தெரிவித்தார்.

Categories

Tech |