Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவினரின் செயலால் ஷாக்…! இதெல்லாம் வெக்கக்கேடானது…. பொங்கி எழுந்த சீமான் ..!!

அண்மையில் பிரதமர் மோடி கலந்து கொண்ட ஆன்மீக நிகழ்வுகளை தமிழ்நாட்டில் உள்ள சில கோயில்களில் பாஜகவினர் திரையில் ஒளிபரப்பு செய்தனர்.

கட்சி சார்ந்த நிகழ்வுகளை அனைவருக்கும் பொதுவான ஆன்மீக தளங்களில் திரை இட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். உத்தரகாண்டில் கேதார்நாத்தில் நடைபெற்ற மத நிகழ்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்றதையும் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து உரையாற்றியதையும், தமிழகத்தில் உள்ள திருவரங்கம் கோயில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ராமேஸ்வரம் ராமநாத ஸ்வாமி கோயில் ஆகியவற்றில் திரையிட்டு ஒளிபரப்பிய பாஜகவினரின் செயல்பாடு அதிர்ச்சியளிக்கிறது.

அரசியல் மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட பொது தலங்களாக விளங்கும் கோயில்களை மதவெறி அரசியலுக்கும், கட்சியின் வேர் பரப்பலுக்கும், தன்னலம் செயல்பாடுகளுக்கும், பாஜகவினர் பயன்படுத்த முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரதமர் மோடியின் மதம் சார்ந்த நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்ய யார் அனுமதித்து.

அத்து மீறி கோயிலுக்குள் நுழைந்து பாஜகவினர் திரையிட்ட போது அதை காவல்துறையினரக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இத்தகைய செயல்களில் ஈடுபட்ட பாஜகவினர் மீது இதுவரை எந்தவித வழக்கும் தொடுக்காது, திமுக அரசு அமைதி காப்பது வெட்கக்கேடானது.

கோயில்களும், வழிபாட்டு தலங்களும், பாஜக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய மத பரப்புரை கூடங்களாக மாறும் என்றால் அறநிலையத் துறை அமைச்சகம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதா ?  ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா எனும் கேள்விக்கு என்ன பதில் உண்டு. பாஜகவை வன்மையாக எதிர்ப்பதாகக் கூறி மக்கள் மன்றத்தில் பரப்புரை செய்து வாக்கு வேட்டை ஆடிய திமுக, தற்போது அதிகாரம் இருந்தும் எதிர்ப்புணர்வை காட்டாது சமரசம் செய்வது ஆரிய அடிவருடி தனமாகும்.

ஆகவே இனிமேலாவது பாஜகவின் மதவாத செயல்பாடுகளுக்கு துணை போகாது, கோயில்களில் மத நிகழ்வுகளில் ஒளிபரப்பிய பாஜகவினர் மீதும், அதற்கு துணை போன அதிகாரிகள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன் என சீமான் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |