உலகத்தில் அதிக சொத்து மதிப்பு கொண்ட நாடுகளை பிரபல நிறுவனம் ஓன்று ஆய்வு செய்துள்ளது.
உலக நாடுகளின் மொத்த வருமானத்தில் 60%த்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டும் 10 நாடுகளை McKinsey & Co நிறுவனம் ஆய்வு நடத்தியுள்ளது. இதனை அடுத்து உலக நாடுகளின் சொத்து மதிப்பானது 2000ல் 156 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில் தற்பொழுது 2020இல் 514 ட்ரில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.
அதிலும் ஏழு ட்ரில்லியன் டாலராக 2000ல் இருந்த சீனாவின் சொத்து மதிப்பானது 2020ல் 120 ட்ரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து 90 ட்ரில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அமெரிக்கா உள்ளது. இந்த நிலையில் சீன மற்றும் அமெரிக்காவில் மூன்றில் இரண்டு பங்கு சொத்துக்களை 10 சதவீதம் பேர் மட்டுமே வைத்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலக நாடுகள் வைத்துள்ள மொத்த சொத்துகளில் 68% ரியல் எஸ்டேட் துறையில் உள்ளது என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. ஒருவேளை இத்துறை சரிந்தால் உலகின் மூன்றில் ஒரு பங்கு சொத்து மதிப்பு அழிந்துவிடும் என்றும் ஆய்வு கூறுகிறது. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் சீனா மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இது மட்டுமின்றி அமெரிக்காவையும் பின்னடையச் செய்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.