Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை…. கால அவகாசம் நீட்டிப்பு?….!!!!!

தமிழகத்தில் சிறுபான்மை பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசு சிறுபான்மையின மாணவர்கள் கல்வி பயில உதவித்தொகை வழங்கி வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. Scholarships.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அந்தந்த பள்ளி நிர்வாகம் ஆய்வு செய்து மாணவர்களின் உதவி தொகை பரிந்துரைக்க வேண்டும்.

சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது முதல் அனைத்து மாநிலங்களிலும் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏராளமான மாணவர்கள் இன்னும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்காமல் உள்ளனர்.எனவே சிறுபான்மையினர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |