Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே! 5000 பேருக்கு பிரசவம் பார்த்த நர்ஸ்…. கடைசியில் நேர்ந்த பரிதாபம்…!!!

மராட்டிய மாநிலம் ஹிங்கொலி மாவட்ட அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தவர் ஜோதி கவ்லி. இவர் 5 ஆயிரம் பெண்களுக்கு தன்னுடைய பணிக்காலத்தில் பிரசவம் பார்த்துள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. இதனை அடுத்து மீண்டும் கற்பமாகிய ஜோதி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் விடுமுறை எடுக்காமல் தன்னுடைய பணியை செய்து வந்துள்ளார்.

இதனையடுத்து பிரசவ வலி ஏற்பட்ட அவர் அதே மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது குழந்தை நலமுடன் பிறந்தது. ஆனால் ஜோதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ஐந்தாயிரம் பெண்களுக்கு பிரசவம் பார்த்த செவிலியர் தன்னுடைய பிரசவத்தின் போது ஏற்பட்ட உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |