இருசக்கர வாகனத்தை திருடிய குற்றத்திற்காக சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வேப்பலோடையில் பலவேசசெல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு மருத்துவமனை அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது தந்து இருசக்கர வாகனம் திருட்டு போனதை அறிந்த பலவேசசெல்வம் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து பலவேசசெல்வம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையின் பேரில் இருசக்கர வாகனத்தை திருடியது 17- வயதுடைய சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் அந்த சிறுவனை கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனர்.