Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“தடைசெய்யப்பட்ட பொருட்கள்” வசமாக சிக்கிய 2 பேர்…. கைது செய்த போலீஸ்….!!

சட்டவிரோதமாக குட்கா கடத்திய 2 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் தலைமையில் காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் குகை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அவர்கள் மெய்யனூர் ஆலமரத்துக்காடு பகுதியைச் சேர்ந்த நாராயணன்லால், குகை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் செவ்வாய்பேட்டையில் உள்ள ஒரு கடையில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி அதை கடத்தி வந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து நாராயணன்லால், ரமேஷ்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த 125 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |