Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களே… உங்களுக்குதான் இந்த குட் நியூஸ்… புத்தாண்டுக்கு எதிர்பார்க்கலாம்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் விரைவில் உயர்த்தப்படும் என்றும், இதற்கான அறிவிப்பு புத்தாண்டில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மீண்டும் சம்பளம் உயர்த்த உள்ளது. இதற்கான அறிவிப்பு புத்தாண்டின் முதல் வாரத்தில் வெளியாகலாம் என தகவல் வெளியாகி உள்ளது. தீபாவளியின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான பஞ்சப்படி 3% உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது புத்தாண்டு பரிசாக வீட்டு வாடகை படி உயர்த்தப்பட உள்ளது, இதற்கான ஆலோசனை மற்றும் முதல்கட்ட நடவடிக்கைகளை மத்திய நிதி அமைச்சகம் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Categories

Tech |