திருப்பத்தூர் மாவட்ட காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மாதவன் நகர் பகுதியில் மணிமேகளை என்பவர் வசித்துவருகிறார். இந்நிலையில் இவரது வீட்டில் திடீரென நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. அதைக் கண்டு அச்சமடைந்து மணிமேகலை திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தகவலறிந்து வந்த அலுவலர் சாண்டி தலைமையிலான நிலைய குழுவினர் பாம்பை தேடினர்.
அப்போது அந்த பாம்பு ஓட்டு வீட்டின் மேற் கூரையின் மீது ஏறி படம் எடுத்த நிலையில் நின்றது. அதை பார்த்த தீயணைப்பு துறையினர் மேற்கூரை மீது ஏறி 6 அடி நீளமுள்ள அந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்தனர். அந்தப் பாம்பை திருப்பத்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு மதகுபட்டி அருகிலுள்ள மலை காட்டில் கொண்டு விடப்பட்டது.