நிலச்சரிவின் காரணமாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே மண்டலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பேசியிருப்பதாவது, சென்னை-எழும்பூர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் இன்று எழும்பூரிலிருந்து புறப்படும் ரயில் நெல்லை குருவாயூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொல்லம் எழும்பூர் எக்ஸ்பிரஸ் இன்று கொல்லத்தில் இருந்து புறப்படும் ரயில் கொல்லம்- நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.