வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிமுகம் செய்துவைத்தார்.
தமிழக அரசு சிமெண்ட் ‘வலிமை’ என்ற புதிய வணிகப் பெயருடன் நடப்பாண்டு முதல் வெளிச் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற சட்டப் பேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்..
இது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு, தமிழ்நாடு சிமெண்ட் கழகம் சார்பில் ‘வலிமை’ சிமெண்ட் என்பது தமிழக அரசு சார்பில் விரைவில் வெளியாகும் என்று தொழில்துறை அமைச்சர் வெளியிட்டிருந்தார்.. இதையடுத்து வலிமை சிமெண்ட்டை முதல்வர் ஸ்டாலின் நாளை (இன்று) அறிமுகம் செய்வதாக அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் தற்போது வலிமை சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.. டான்செம் நிறுவனம் தயாரித்துள்ள தமிழ்நாடு அரசின் மலிவு விலை வலிமை சிமெண்ட்-ஐ தலைமை செயலகத்தில் அறிமுகம் செய்து விற்பனையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்..