வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மூக்கண்டப்பள்ளி பகுதியில் கிருஷ்ணா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கிருஷ்ணா இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து விட்டது. அந்த இடிபாடுகளில் சிக்கி கிருஷ்ணா உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதனை அடுத்து கிருஷ்ணாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.