Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

2 இல்லை…. 1 தான்…. “ரூ 5 கோடி இல்ல, 1.5 கோடி தான்”….. மறுக்கும் ஹர்திக் பாண்டியா!!

2 கைக் கடிகாரங்கள் இல்லை, 1.5 கோடி மதிப்புள்ள ஒரு கைக்கடிகாரம் தான் பறிமுதல் செய்யப்பட்டது என்று ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்..

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை போட்டிகள் முடிவடைந்து விட்டது.. துபாயில் நடந்த இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் நியூசிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையையும்  கைப்பற்றி விட்டது.. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறிவிட்டது.. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுமே தங்களது நாடுகளுக்கு திரும்பி கொண்டு உள்ளனர்..இந்நிலையில் இந்திய அணியும் நாடு திரும்ப ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் இருந்து மும்பை விமான நிலையம் வந்தது..

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் வந்தார்.. அப்போது அனைத்து வீரர்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.. ஹர்திக் பாண்டியாவை சோதனை செய்தபோது, அவரிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள் இருந்ததாகவும், உரிய ரசீது இல்லாத காரணத்தால் அதனை சுங்கத்துறையினர் கைப்பற்றியதாகவும் தகவல் வெளியானது..

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், 15ஆம் தேதி திங்கள் கிழமை காலை 2 கைக் கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை.. ஒரு கைக்கடிகாரத்தை தான் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. அதன் மதிப்பு 1.5 கோடி மட்டுமே என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்..  ரூ.5 கோடி மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்த நிலையில், இந்த விளக்கத்தை அளித்துள்ளார் ஹர்திக்…

Categories

Tech |