நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து மற்றும் மின் சாதனங்களின் பயன்பாடு, போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு அதிகரிக்கிறது. அதனை கருத்தில் கொண்டு நடப்பு ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மக்கள் அதனை முறையாக பின்பற்றாமல் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்றின் தரம் மோசமடைந்து மேலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காற்று மாசை குறைக்கும் முயற்சியாக சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பணியாளர்கள்,ஒப்பந்த ஊழியர்கள் வாரத்தில் ஒருநாள் மோட்டார் வாகனங்களை தவிர்க்க முடிவு செய்துள்ளனர்.அதன்படி நவம்பர் 17ஆம் தேதி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு வந்து செல்லும்போது போக்குவரத்து அல்லது நடைபயணமாக அல்லது சைக்கிள் அல்லது மின்சார வாகனங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளனர்.