இனிமேல் தமிழகம் வருவதற்கு கொரோணா பரிசோதனை சான்றிதழ் அவசியம் இல்லை என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தை தவிர பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இ-பதிவு அவசியம் என்று அரசு தெரிவித்துள்ளது. இதுவரை விமான பயணம் செய்பவர்கள் பயணத்திற்கு முன்னதாக 72 மணி நேரத்திற்குள் செய்த கொரோனா பரிசோதனை சான்றிதழ் கொண்டுவருவது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழைக் கொண்டு வருவதை தமிழக அரசு கட்டாயப்படுத்தி இருந்தது.
இந்த நடைமுறை தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. கேரளாவை தவிர பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருபவர்கள் கொரோனா சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய சான்றிதழை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தமிழகம் வருவதற்கான இ-பதிவு கட்டாயம். மேலும் புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.