செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பார்த்திபனிடம் சென்னையில் மழை பெய்து இதே மாதிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது, தொடர்ந்து ஒவ்வொரு மழைக்கும் இதேபோல் தண்ணீர் தேங்கி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டபோது, அதுவும் நமக்கு ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது, ஆட்சிகள் மாறிக்கொண்டிருக்கிறது, கட்சிகள் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் மழை தேங்குவது மட்டும் அப்படியேதான் இருக்கிறது. இது மிகப்பெரிய வருத்தமான ஒரு விஷயம். இதற்கு ஏதாவது ஒரு நிரந்தர தீர்வு என்று ஒன்று இருக்கவேண்டும், அதுதான் நம்முடைய வேண்டுதலாக இருக்கும்.
தற்பொழுதுள்ள ஆட்சியைப் பற்றி கேட்டதற்கு, மிக சிறப்பாக இருக்கிறது. நான் சமீபத்தில் தமிழக முதல்வரை சந்திக்கும் போது சொன்னேன், தேர்தலின்போது எல்லாருமே அவர்கள் பிரச்சாரம் செய்வார்கள், நான் இதைச் செய்தேன், அதைச் செய்தேன் என்று. ஆனால் இவர்கள் ஆட்சியில் வந்த பிறகு எல்லாரும் எதிர்க்கட்சியில் இருக்கிறவர்கள் ரொம்ப பெருசா சண்டை போட முடியாத அளவிற்கு ஒரு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. மக்களால் பாராட்டப்படக் கூடிய ஒரு ஆட்சியாக இருக்கிறது அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.