ஆந்திராவிலிருந்து மராட்டிய மாநிலத்திற்கு கடத்திச் சென்ற 1,500 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
குஜராத்தில் 120 கிலோ எடையுள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருளை குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் மராட்டிய மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் ஏராண்டல் பகுதி அருகே மும்பை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து விசாரணை செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 1,500 கிலோ எடையுள்ள போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த போதை பொருளை ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து கடத்தியதாக விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவர்கள் இருவரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.