Categories
கிரிக்கெட் விளையாட்டு

கோடையோடு வீடு திரும்பவுள்ள ஆஸி. கேப்டன்?

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டனான டிம் பெய்ன் வருகிற கோடை காலத்தோடு அணியிலிருந்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஸ்டீவ் ஸ்மித்தின் ஓராண்டு தடை காரணமாக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டனாக 2018ஆம் ஆண்டு முதல் வலம்வருபவர் டிம் பெய்ன். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும் 35 ஒருநாள், 12 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.

Image result for Tim Paine

இந்நிலையில் டிம் பெய்ன் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வருகிற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரே எனது கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

Image result for Tim Paine

மேலும் அவர் கூறுகையில், “நான் மனதளவிலும் உடலளவிலும் நன்றாகத்தான் உள்ளேன். ஆனலும் எனது வயது காரணமாக என்னால் வெகுகாலம் கிரிக்கெட்டில் நீடிக்க இயலாது. அதனால் வருகிற கோடைக்காலமே எனது கடைசி டெஸ்ட் பயணமாகவும் இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

Image result for Tim Paine

மேலும் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் வருகிற 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டிம் பெய்ன் செய்தியாளர்களிடையே கூறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவுள்ளது.

Categories

Tech |