Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாபர் அசாம் கேப்டன்…. “ஆனால் இந்திய வீரர் ஒருத்தர் கூட இல்ல”… அணியை அறிவித்த ஐ.சி.சி!!

பாபர் அசாம் தலைமையில் டி20 உலகக்கோப்பைக்கான அணியை அறிவித்தது ஐ.சி.சி.

டி20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடந்து முடிந்துள்ளது.. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணி துபாயில் நேற்று மோதியது.. இதில் டாஸ் வென்று பந்துவீச முடிவெடுத்தது ஆஸ்திரேலியா. இதையடுத்து  ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில்  4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதுவரை டி20 உலகக் கோப்பையை வெல்லாத ஆஸ்திரேலிய அணி முதல் முறையாக கோப்பையை வென்றுள்ளதால் அந்த அணி வீரர்கள் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் உள்ளனர்.. உலக கோப்பையை வெல்லும் அணியாகக் கணிக்கப்பட்ட இந்திய அணி முதல் 2 போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணியிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது.. அதன்பிறகு தொடர்ச்சியாக 3 போட்டியிலும் வென்றாலும் அரையிறுதிக்கு போகமுடியவில்லை..

இந்த நிலையில் இந்த தொடருக்கான மிக மதிப்பு மிக்க அணியை ஐசிசி அறிவித்துள்ளது. ஆனால் ஒரு இந்திய வீரர் கூட  இதில் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.. ஐசிசி தேர்ந்தெடுத்துள்ள இந்த அணியில் பாபர் அசாம் கேப்டனாக இருக்கிறார்.. டேவிட் வார்னர், ஜாஸ் பட்லர், பாபர் அசாம் (c), அசலங்கா, மார்க்ரம், மொயின் அலி, ஹசரங்கா, ஆடம் சாம்பா, ஜோஷ் ஹேசில்வுட், டிரென்ட் போல்ட், நோர்ட்ஜே ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.. மேலும் 12ஆவது வீரராக பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் ஷா அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |