Categories
மாநில செய்திகள்

BREAKING: ஆன்லைன் தேர்வு கிடையாது…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட அனைவருக்கும் நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வாக நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடைபெறாது.நேரடி எழுத்து தேர்வாக மட்டும் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஆன்லைனில் தேர்வு நடத்தினால் மாணவர்களின் திறன் கேள்விக்குறியாகும். எனவே ஆன்லைனில் தேர்வு நடைபெறாது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |