Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதை தடை செய்யக்கோரி…. பொதுமக்களின் சாலை மறியல்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

கல்குவாரியை தடை செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளித்திருப்பூர் அருsalai mariyal கே கல்குவாரி ஒன்று இருக்கிறது. இந்த குவாரியில் கற்களை பெயர்க்க வெடி வைக்கப்படும். அப்போது அதிலிருந்து சிதறும் கற்கள் கொமராயனூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விழுவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குள்ள கூப்புக்காடு பிரிவு என்ற இடத்துக்கு திரண்டு வந்து திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

அப்போது காவல்துறையினரிடம் பொதுமக்கள் கூறியபோது “வெடி வைக்கும்போது கல்குவாரியில் இருந்து கற்கள் எங்களுடைய விவசாய நிலங்களில் தூக்கி வீசப்படுகிறது. ஆகவே கல்குவாரியை தடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு காவல்துறையினர் கூறியபோது “இதுகுறித்து எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |