நாட்டின் வட மாநிலங்களில் கடந்த சில வருடங்களாக அதிக அளவு காற்று மாசுபாடு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. அதிகரிக்கும் வாகன போக்குவரத்து,மின் சாதனங்களின் பயன்பாடு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நடப்பு ஆண்டு தீபாவளி முடிந்துள்ள நிலையில், காற்று மாசு மேலும் அதிகரித்துள்ளது. நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் இன்றுமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் காற்று மாசு அளவை குறைக்கும் விதமாக டெல்லி முழுவதும் கட்டுமான பணிகள் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது.
இதனைப் போல தற்போது ஹரியானா மாநிலத்தில் காற்று மாசு அதிகரித்துள்ளது.அதனால் மாணவர்கள் மாசுபட்ட காற்று சுவாசிக்காமல் இருக்க இன்று முதல் நவம்பர் 17ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அனைத்து கட்டுமான பணிகளும் நவம்பர் 17ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியார் அலுவலக ஊழியர்கள் அனைவரும் வீட்டில் இருந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது.