நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாபர் அசாம் முதலிடத்தை பிடித்துள்ளார்.
7 வது டி20 உலக கோப்பை போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 17ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் நேற்றிரவு நடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் நியூசிலாந்தை வீழ்த்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச் சென்றது. இதனிடையே நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் 303 ரன்கள் எடுத்து முதலிடத்தை பிடித்துள்ளார் .
அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் 289 ரன்கள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார் .இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 281 ரன்கள் எடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார் .இதை அடுத்து இங்கிலாந்து அணியில் ஜாஸ் பட்லர் இலங்கை வீரர் அசலங்கா , நமீபியா அணி வீரர் டேவிட் விசா ஆகியோர் முறையே 4 ,5 மற்றும் 6-வது இடத்தை பிடித்துள்ளனர்.