Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் பிரச்சினையா…? “எங்கள விமர்சிப்பவங்க பார்வையிலதா பிரச்சனை இருக்கு”…  ஓ பன்னீர்செல்வம் பதில்…!!!

தனித்தனியாக நிவாரண பொருட்களை வழங்கியதால் தனக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சனையா? என்பது குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தனியாக சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதை பார்த்த பலரும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வதிற்கு, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கட்சி இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நானும் தனித்தனியாக நிவாரணம் வழங்குவது குறித்து விமர்சனம் எழுந்து வருகின்றது.

எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. இதனை விமர்சிப்பார் பார்வையில் தான் தவறு உள்ளது. மேலும் கனமழையின் காரணமாக 14 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த செய்தி அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்திற்கு என் சார்பிலும் அதிமுக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வருவாய் அமைச்சர் அறிவித்துள்ளார். இது ஏற்றுக்கொள்ளக் கூடியதும் கிடையாது. அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டதை விட தற்போது குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது  இயற்கை நீதிக்கு முரணானது. எனவே முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் அல்லது அதற்கு மேல் வழங்கி உத்தரவிட வேண்டும்” எனவும் அதில் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |