கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்படுகிறது.அதுமட்டுமல்லாமல் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த 3 நாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Categories
BREAKING: 7 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை…. புதிய அறிவிப்பு….!!!!!
