Categories
தேசிய செய்திகள்

இதற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது?…. முழு ஊரடங்கை அமல்படுத்த தயார்… சுப்ரீம் கோர்ட்டில் டெல்லி அரசு பதில்!!

உச்சத்தில் இருக்கும் காற்றுமாசை கட்டுப்படுத்த டெல்லியில் முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் என்று அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது..

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு என்பது எப்பொழுதுமே பெரும் பிரச்சினையாக இருந்து  வருகிறது.. இந்த காசு மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.. நிறைய யோசனைகள் தலைநகர் டெல்லி அரசின் சார்பாக இன்று நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது..

குறிப்பாக டெல்லியில் சுற்றி இருக்கக்கூடிய செங்கல் சூளைகள், கற்களை உடைக்கக் கூடிய பெரிய பெரிய குவாரிகள் உள்ளிட்டவற்றை எல்லாம் தற்காலிகமாக மூடி வைக்கலாம். மெட்ரோ சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.. வாகனம் நிறுத்துவதற்கான பார்க்கிங் கட்டணங்களை 4 மடங்கு வரை உயர்த்தலாம், அப்படி என்றால் பொதுமக்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு வரமாட்டார்கள் என்ற ஒரு யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருக்கும்போது டீசல் மூலம் இயங்கக்கூடிய ஜெனரேட்டர்களுக்கு தடை விதிக்கலாம்.. பொது போக்குவரத்து கட்டணத்தை 3 மடங்கு வரை உயர்த்துவதன் மூலம் பொதுமக்கள் தேவையில்லாமல் பயணங்கள் செய்வது என்பது தவிர்க்கலாம்.. டெல்லியில் சுற்றுவட்டாரத்தில் அமைந்திருக்கக்கூடிய கூடிய அனல் மின் நிலையங்களை தற்காலிகமாக மூடலாம் உள்ளிட்ட பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் இவையெல்லாம் நீண்ட நாட்களுக்கான யோசனையாக  இருக்கிறது.. தற்போது உடனடியாக காற்றின் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை என்பது தேவை என்று கூறினார்கள்.. காற்று மாசுபாட்டை குறைக்க 2 அல்லது 3 தினங்களுக்கு டெல்லியில் வாகன போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று யோசனை வழங்கியுள்ள உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளை நாளை மாலைக்குள் அமல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.  இதற்கு டெல்லியில் முழு முடக்கத்தை அமல்படுத்தவும் தயாராக இருக்கிறோம் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 

Categories

Tech |