நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில், குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இதையடுத்து விரைவில் ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ரயில்வே துறை அறிவித்திருந்தது.
இந்நிலையில் கொரோனா காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த ரயில் சேவை அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்ப 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆகிவிடும் என்று இந்திய ரயில்வே அதிர்ச்சித் தகவலை அளித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் மார்ச் மாதம் வரை மக்கள் முன்பதிவு செய்துள்ளதால்,ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.